
இவ்விழாவிற்கு சங்க மாவட்டத் தலைவர் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் தலைமை வகித்தார். மக்கள் உரிமைகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்தார். தொடர்ந்து சங்கச் செயலர், அய்யாறு ச.புகழேந்தி, பொருளர் கண்டிமுத்து, துணைச் செயலர் துரை.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மக்கள் உரிமை பாதுகாப்பு கழக மாநிலத் துணைத்தலைவர் டாக்டர் . க கே.ரஞ்சித்குமார், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் எம்.சண்முகம், மண்டலப்பொறுப்பாளர் ஏ.ஆர் சுப்பிரமணியன் , சந்திரசேகரன், ராஜா, திருசக்திவேல் கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவினை சங்க ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளருமான புலவர் ஆதி.நெடுஞ்செழியன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

No comments:
Post a Comment