உழவர் சந்தை அருகில் தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் பெருவிழா.
தஞ்சாவூர் உழவர்சந்தை அருகில் தரைக்கடை விவசாயி வியாபாரிகள் இருக்கும் இடத்தில் தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் சார்பில் சமத்துவம் மற்றும் சுகாதார பொங்கல் விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாநில தலைவர் அருணா அஜிஸ் தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்து, பின்னர் அவர்கள் மஞ்சள்கொத்து, கரும்பு, பழங்களுடன் மண்பானையில் பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பொங்கி வழிந்ததும் அங்கே கூடி நின்ற விவசாயி வியாபாரிகள்,சங்க நிர்வாகிகள் மற்றும்,பொதுமக்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என கோஷம் எழுப்பியபடி சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இது குறித்து மாநில தலைவர் அருணா அஜிஸ் கூறியதாவது:-
தமிழர் பண்டிகையில் மிகவும் முக்கியமான பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையாகும். விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயிர் செய்து, அறுவடை செய்த பொருட்களை கொண்டு பொங்கல் வைத்து தெய்வங்களை வணங்குவதும், விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட காளைகளை போற்றி, மாட்டுப்பொங்கலும், கன்றுகளை போற்றும் விதமாக காணும் பொங்கலும் கொண்டாடி வருகிறோம்.எனக் கூறினார்
விழாவை யொட்டி மாநில கொள்கை பரப்பு செயலாளர் டென்னீஸ் , மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் லயன். தூதர்.டாக்டர். இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் , தஞ்சை மாவட்ட ஆலோசகர் ஆரோக்கியசாமி , தஞ்சை மாவட்ட தகவல் தகவல் தொழில்நுட்ப செயலாளர் குனா , பூதலுர் ஒன்றிய செயலாளர் அஜய் , கண்டியூர் சிவா, ஒன்றிய செயலாளர் விஷ்ணு , செண்பகபுரம் ராஜ்குமார் உள்பட பலர் நிர்வாகிகள் உடனிருந்தனர்

No comments:
Post a Comment