பேராவூரணியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில்நிலையம் அருகே இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் மாவட்டப் பொருளாளர் நெப்போலியன், வட்டாரத் தலைவர்கள் சேக் இப்ராம்ஷா, இளங்கோ, மாவட்டத் துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் 50 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ரவியை கண்டித்தும் ஒன்றிய அரசு ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
செய்தியாளர்: த.நீலகண்டன் .

No comments:
Post a Comment