தமிழக ஆளுநர் என்.ரவி பதவி விலக வலியுறுத்தி தஞ்சையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
அரசமைப்பு சட்டத்தை அச்சுறுத்தும்,ஆர். எஸ்.எஸ்.பாஜகயின், தமிழ்நாடு ஆளுநர்,R.N.ரவியை பதவி விலக வலியுறுத்தி,தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், தஞ்சை ரயிலடி முன்பு ,19.1.2023 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்,பி ஜி. இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட தலைவர், நாஞ்சி.கீ. வரதராஜன்,மாநில பொதுக்குழு உறுப்பினர், பொறியாளர். ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர், G.K. பெருமாள் கலந்து கொண்டு கண்டன உரையில் பேசியதாவது:-
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையினை படிக்காமல், தேவை இல்லாத செய்தியினை படித்துள்ளார், இது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமின்றி சட்டத்தையே அவமதிக்கும்
செயலாக உள்ளது. தமிழக ஆளுநர் அருகில் முதலமைச்சர் அமர்ந்திருக்கும் போதே, தமிழக ஆளுநர், R.N. ரவி வெளிநடப்பு செய்தது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, என இவ்வாறு பேசினார். பொதுச் செயலாளர்கள், கரந்தைகண்ணன், செந்தில் சிவகுமார், மாவட்ட செயலாளர் வடிவேல், விவசாய பிரிவு செயலாளர் மணிவண்ணன், மாநகர மாவட்ட விவசாய பிரிவு பொதுச் செயலாளர் அரு,சீர் தங்கராசு, தஞ்சை மாநகர மாவட்ட சேவா தல தலைவர்,Ln. திருஞானம், ராதாகிருஷ்ணன் மருத்துவக் கல்லூரி பகுதி கோட்ட செயலாளர் மகேந்திரன்,வல்லம் நகரத் தலைவர் பாட்ஷா,செயலாளர் அசோக்,வழக்கறிஞர் மதியழகன், பூதலூர் அன்பழகன், ராஜாங்கம், அருண் சுபாஷ்,ராசு, யாத்திரை கணேசன் சகோதர சீனிவாசன்மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பொருளாளர், பழனியப்பன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment