இளங்கார்குடியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா
பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் உம்பளாப்பாடி ஊராட்சி இளங்கார்குடி கிராமத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 இன் கீழ் ரூ. 14.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து, விற்பனையை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், திமுக பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.தாமரைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர், ஒப்பந்ததாரர்கள் மணிமாறன், மணிவண்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment