ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் திறப்பு.
தஞ்சை மாவட்டம்
பேராவூரணி அருகே வளப்பிரமன்காடு ஊராட்சி மன்ற புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, மாவட்ட கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: த.நீலகண்டன் .

No comments:
Post a Comment