கும்பகோணம் தனியார் பள்ளியில் வீரத்தமிழர் மாரத்தான் போட்டி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கான வீரத்தமிழர் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.
நான்கு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட 1200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதில் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளின் உடல் நலத்தை பேணும் வகையிலும் அவர்களுக்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும் இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டினை பள்ளி தாளாளர் கார்த்திகேயன் மற்றும் திருமதி பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார்கள். கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பள்ளி தாளாளர் அவர்களுக்கு மாணவ மாணவியர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment