தஞ்சையில் இளம் சமூக ஆர்வலர் தனி ஒருவனாக நடத்திய மரக்கன்று நடும் விழா.
தஞ்சையைச் சேர்ந்த 23 வயது இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம் பெற்றவர், பல விருதுகளைப் பெற்றவர், லயன் தூதர், டாக்டர் இரா. பிரனேஷ் இன்பேன்ட் ராஜ் என்பவர் தனி நபராக யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த செலவில் மரக்கன்றுகளை வாங்கி ஒவ்வொரு இடத்திலும் இந்த மரக்கன்றுகளை நட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல். நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம். நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம். இன்று காற்று மாசுபடுகிறது மரங்களை அழிக்காமல் இருந்தாலே நாம் பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம். இன்று இங்கு நடும் மரங்களை நாம் அனைவரும் ஒன்றாக பராமரித்தல் அவசியம்.
உலகில் மரங்களை நடுபவர்கள் மிகக் குறைவு. ஆனால் மரங்களைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். மரம் மனிதனின் பயன்பாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்கிறது. மரங்களை நடுவது நிலையான தர்மத்திற்கு நிகரானது. மரம் வளர்க்க முயல்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும். இதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயம் பாதுகாக்க முடியும் என்றார்.

No comments:
Post a Comment