விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி.
திருவையாறு வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 50 விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் தொடர்பான கண்டுணர்வு சுற்றுலாவில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதுகுறித்து திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சுஜாதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஒருங்கிணைந்த பண்ணயத்தை பற்றி நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மைய பண்ணை மேலாளர் நக்கீரன் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் ஒன்றின் கழிவு மற்றொன்றிற்க்கு எப்படி மூலப்பொருளாக பயன்படுத்துவது என்பது பற்றியும் அவர் தெளிவாக கூறினார். பின்னர் அங்கு ஒருங்கிணைந்த பண்ணைய மாதிரி பண்ணை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத் துறையின் இரண்டு ஏக்கருக்கான மாதிரி பண்ணை ஆகியவற்றை விவசாயிகள் பார்வையிட்டனர்.
மேலும் அறுவடைக்குப் பின் பயிர் வகை பயிர்களை எப்படி சேமித்து வைப்பது என்பது பற்றி பற்றி பேராசிரியர் கமலா சுந்தரி விளக்கினார். மேலும் இங்கே காளான் வளர்ப்பு, தோட்டக்கலை துறையின் நர்சரி மற்றும் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை திருவையாறு வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா, உதவி மேலாளர்கள் சாந்தகுமாரி, மங்களேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment