கும்பகோணம் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான தாயம் விளையாட்டு போட்டி
சிறுவர் சிறுமியர்களின் விளையாட்டுகளில் பாரம்பரியமாக பெண்களுக்கான விளையாட்டு மற்றும் ஆண்களுக்கான விளையாட்டு என இரண்டு வகை உள்ளது அதில் பெண்கள் அதிகம் விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் கண்ணாமூச்சி குலைகுலையாய் முந்திரிக்காய் கிச்சு கிச்சு தாம்பூலம் பல்லாங்குழி சிப்பிங் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் தாயமும் ஒரு விளையாட்டு இதே போல ஆண்கள் பச்சை குதிரை தாண்டுதல் கபடி பம்பரம் கோலிக்குண்டு கிட்டிப் புல் போன்ற பல விளையாட்டுகளும் உள்ளன .இது போன்ற விளையாட்டுகள் சமீப காலமாக ஆண்களும் பெண்களும் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான தாயம் போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சிறுவர் சிறுமியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட தாயம் போட்டி நடைபெற்றது இதில் 300க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள் நான்கு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 55 பேர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு உற்சாக படுத்தப்பட்டனர்.

No comments:
Post a Comment