பேராவூரணி அருகே 50 ஆண்டாக இயங்கி வரும் பொன்காடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு இடம் பாற்றாக்குறை. சரிசெய்ய கிராமத்தினர் தீவிர முயற்சி. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 30 January 2023

பேராவூரணி அருகே 50 ஆண்டாக இயங்கி வரும் பொன்காடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு இடம் பாற்றாக்குறை. சரிசெய்ய கிராமத்தினர் தீவிர முயற்சி.

 

பேராவூரணி அருகே 50 ஆண்டாக இயங்கி வரும் பொன்காடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு இடம் பாற்றாக்குறை. சரிசெய்ய கிராமத்தினர் தீவிர முயற்சி.



தஞ்சைமாவட்டம் ,பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்-காடு கிராமத்தில் கடந்த 50 ஆண்டாக இயங்கிவரும் பொன்விழா ஆண்டை கொண்டாடவிருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் தற்போது சுமார் 400 மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளிக்கு இடம் பற்றாகுறையாக இருப்பதால்  மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 


இதன் காரணமாக அருகில் இடம் வாங்கி பள்ளியை விரிவுபடுத்துவதற்காக சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்திசேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சு.கணேசன்,பள்ளி வளர்ச்சி குழு, பள்ளி மேலாண்மை குழு, கவுன்சிலர்கள், பொன்காடு கிராமத்தார்கள், ஆசிரியர்கள். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து  6 சென்ட் இடம் வாங்குவதற்கு முதல் தவனையாக  பணத்தை நிலஉரிமையாளரிடம் வழங்கினர். 

இந்த இடத்தை வாங்கி பள்ளிக்கு கொடுத்து பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி நடத்தபோவதாகவும் குழுவினர் கூறினர். இந்நிலையில் இரண்டாம் தவனை பணம் நில உரிமையாளர் வீரப்பனிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் லதாஈஸ்வரி ,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் வி.என்.பக்கிரிசாமி, பள்ளி மேலாண்மை குழுதலைவர் சரண்யா, துணைத் தலைவர் டாக்டர் அருண் சுரேஷ், கூட்டுறவு சங்க தலைவர் ஆர் .பி.ராஜேந்திரன், புரவலர்கள் அச்சகம் கோ .நீலகண்டன், அமுதம் கந்தசாமி, சி .நீலகண்டன், என்.கனகராஜ், ஆர் நீலகண்டன், ஆசிரியர் சேகர், மெய்சுடர் நா. வெங்கடேசன்,முனைவர் கணேஷ்குமார், டாக்டர் அருண்சுரேஷ், என் .செந்தில்குமார் மற்றும் கொடையாளர்கள், எஸ் .கந்தப்பன்,
டாக்டர் துரை. நீலகண்டன், டாக்டர் விவேகானந்தன்-பிரேம்லதா வேகானந்தன், டாக்டர் ரஞ்சித்குமார், மல்லிகை வை. சிதம்பரம், மாவட்ட கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன், பொறியாளர்கள் ஏசிசி ராஜா ,துரையரசன்,லண்டன் ஸ்டீல் கம்பெனி முகமது கனி, ஆவணம் கூட்டுறவு சங்க தலைவர் வீரசிங்கம் ,சாகுல்ஹமீது மற்றும் ஆசிரியர்கள் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் தவணையான தொகையை இடத்தின் உரிமையாளர் வீரப்பனிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த குழுவினர் கூறும்பொழுது பிப்ரவரி மாதம் இறுதியில் மீதி தொகையை இடத்தின் உரிமையாளரிடம் ஒப்படைத்து, பத்திர பதிவு செய்து,  பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்திசேகர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோரை அழைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் என்.அசோக்குமார் அவர்கள் மூலம் பத்திரத்தை அரசிடம் ஒப்படைப்பதாக முடிவு செய்துள்ளோம் என கூறினர்.


செய்தியாளர் த.நீலகண்டன் .

No comments:

Post a Comment

Post Top Ad