மேட்டூர் அணை திறப்பை பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்க பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் வடக்கு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொன்னாப்பூர் பாஸ்கரன் தலைமையற்றார். தெற்கு மாவட்ட செயலாளர் மணி வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் எல் பழனியப்பன் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில கௌரவ தலைவர் எம் பி ராமன் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் பிஆர்.பாண்டியன் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மார்ச் 1ம் தேதி குமரி முதல் டெல்லி வரை நீதிக்கான நடைபயணத்தை தொடங்க உள்ளது.12 மாநிலங்கள் வழியாக டெல்லி சென்றடைகிறது. இந்த பயணத்தில் பல்வேறு தேசிய அளவிலான விவசாயிகள் சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தில்லியில் மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். மரபணு மாற்றப்பட்ட விதைகளை கைவிட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருவதால், டிச., மாதத்தில் தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிப்ரவரி இறுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.
விவசாய வளர்ச்சிக்கு இடையூறில்லாமல் 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள் செயல்படுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட்டு, குடியரசு தின கிராமசபை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.ஒப்புதலுக்குப் பிறகு விவசாயிகள் பார்வைக்காக பட்டியலை வெளியிட வேண்டும்.
விவசாயிகள் 100 நாட்கள் தடையின்றி விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும்.
சிதம்பரம் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தைத் தடை செய்ய வலியுறுத்தி கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உதவ வேண்டும். கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில், செயலாளர் பச்சரவி, புதுவை தெற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.வீரப்பன் தஞ்சாவூர் நகர தலைவர் வெற்றிவேந்தன் உள்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment