அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரியில், பைக் ரைடு மியூசிக் ஷேர் விளையாட்டு அறிமுக விழா.
தஞ்சாவூரில் உள்ள, அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
டாக்டர்,ஃபர்ஸ்ட் டைம் இன் தி வேர்ல்ட் ஆர்கனைசேஷன்
நிறுவனர், லயன்ஸ் ட்ரீ,சிவகுமார் அவர் பேசும்போது "தோல்வியையும் ஆனந்தமாக கொண்டாடுவோம், என்கிற முழக்கத்தை மாணவ,மாணவிகள் மனதில் பதியும்படியாக வைத்துக்கொள்ள வேண்டும், உலகிலேயே முதல்முறையாக "பைக் ரைடு மியூசிக் ஷேர்"வினோத விளையாட்டினை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த வினோதமான விளையாட்டில்,50- மாணவர்களும், 13-மாணவிகளும் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஈரோடு, மகேஷ் அவர்கள் ஸ்டார்ட் மியூசிக் என்று சொல்லி விளையாட்டை துவங்கி வைத்து, விளையாட்டையும், விளையாடியவர்களையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.லயன்ஸ் கிளப் துணை ஆளுநர் Er. சவரிராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்,பேரா,ஜோ. இம்மானுவேல் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்,கல்லூரி தாளாளர் அருட்தந்தை, டாக்டர். செபஸ்டியன் பெரியண்ணன் அவர்கள் தலைமை வகித்தார்.
நிர்வாகி அருட்தந்தை, ஆரோன்,முதல்வர் டாக்டர். பிலோமிநாதன் நன்றியுரை வழங்கினார், லயன்ஸ் கிளப் வட்டார தலைவர் அட்வகேட் காசி ராவிச்சந்திரன்,
தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க, கௌரவத் தலைவர் அறிவழகன், தஞ்சாவூர் லயன்ஸ் விக்டரி Singer கோவிந்தராஜ், உடற்கல்வி இயக்குநர் பிரேம் மற்றும் கல்லூரியின் அனைத்து இருபால் பேராசிரியர்களும், இந்த புதுமையான நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.தகுதிச் சுற்றுக்கானப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் வீரமணி மற்றும் ஆர்த்தி இருவரும் தேர்வுச் சுற்றுக்கு முன்னேறினர்.
மேலும்,ஒட்டுமொத்த கல்லூரியும், விளையாட்டை கண்டு மகிழ்ந்து பாராட்டியதும், வருகை தந்த சிறப்பு விருந்தினர்களும் பாராட்டியது இந்த வினோத விளையாட்டிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறேன் என்று, எப்.டி. டபிள் ,அமைப்பின் நிறுவனர் லயன்ஸ் தஞ்சாவூர் தென்றல் டாக்டர். ட்ரீ சிவகுமார் கூறினார்.

No comments:
Post a Comment