தஞ்சாவூர் மகளிர் தையல் தொழிலாளர்கள் பேரவைக் கூட்டம்.
தஞ்சாவூர் மகளிர் தையல் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் லிமிடெட் இண்ட். 1602.தஞ்சாவூரின் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை சங்க அலுவலகம் கட்டிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலாண்மை இயக்குநர் தோ.விஜயா வரவேற்றார்.
இதில் தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் தொழிற் கூட்டுறவு அலுவலர் மேற்பார்வை குந்தவை நாச்சியார் பெண்கள் தையல் சங்க மேலாண்மை இயக்குநர் ஆகியோர் சிறப்பு அழைப்பார் களாக கலந்து கொண்டனர். மேலும் சங்க நிர்வாகிகள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நிர்வாக குழு உறுப்பினர்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர் சங்கம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்ற இலாபத்தை சங்க துணை விதிகளின் அடிப்படையில் பிரித்து உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவு தொகை வழங்கபட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் மைசூர் மணி பேசும் போது உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சங்கங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட அனைவரும் கூட்டு முயற்சி சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொழிற் கூட்டுறவு அலுவலர் அவர்கள் சங்க உறுப்பினர்கள் கோரிய கோரிக்கைகளுக்கு உரிய விளக்கத்தை அளித்தார். சங்க மேலாண்மை இயக்குநர் அவர்கள்உறுப்பினர்கள் அனைவரும் சீருடை தைக்கும் பணியிணை சிறப்பாக செய்ய அறிவுறுத்தினார். அனைத்து உறுப்பினர்களுக்கும் மதிய உணவு வழங்கி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கணக்காளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment