தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் செவிலியர்கள் தமிழக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் இன்று கொரோனா காலத்தில் மருத்துவமனையில் பணிபுரிய எம்.ஆர்.பி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் தமிழக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் எம்.ஆர்.பி. 2019 ஆம் ஆண்டில் கட்டாய பணி ஆணை மூலம் கொரோனாவின் மூன்று அலைகளிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளோம்.
நிரந்தர ஒப்பந்தப் பணியை வழங்க வேண்டும்.ஆனால் தற்போது ஒப்பந்த பணிகளுக்கு தற்காலிகமாக செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதை நாங்கள் ஏற்க மாட்டோம்.இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என பொய்யான தகவல் தருகின்றனர். இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.எனவே, தற்காலிக ஒப்பந்த பணியை ரத்து செய்து, நிரந்தர ஒப்பந்த பணி வழங்க வேண்டும்.அவ்வாறு கூறுகிறது

No comments:
Post a Comment