தஞ்சையில் ஏ.ஐ.டி.யு.சி யினர் சாலை மறியல் :போலீஸ் திணறல்
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும், போக்குவரத்து கழக பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது, டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தெருவோர வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமையாக்க வேண்டும், நிதியுதவி அதிகரிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி, மற்றும் மத்திய அரசை கண்டிக்கிறது. ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.
இதற்கு தேசிய செயற்குழு உறுப்பினர் சந்திரகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் அன்பழகன், அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் தாமரைச்செல்வன், கஸ்தூரி, கே.சுந்தரபாண்டியன்,
ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர்அப்பாத்துரை, சுப்பிரமணியன் , தங்கராசு, நுகர் பொருள் வாணிபகழக சங்க மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், தியாகராஜன், உடல்உழைப்பு சங்க நிர்வாகிகள்பரிமளா, சுதா,கல்யாணி, மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், நிர்வாகிகள் நாகராஜன், லெட்சுமணன், கட்டுமான சங்க நிர்வாகிகள்செல்வம், சிவப்பியம்மாள், குணசேகரன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஏஐடியுசி நிர்வாகிகள் தபால் நிலையம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல் கும்பகோணம், பட்டுக்கோட்டையில் ஏஐடியுசி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது."இந்த 3 இடங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 56 பெண்கள் உள்பட ஏறத்தாழ 300 போ் கைது செய்யப்பட்டனா்."

No comments:
Post a Comment