கண்டியூர் கால்நடை மருத்துவமனை சார்பில் சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்.
திருவையாறு அருகே திருச்சோற்றுததுறையில் கண்டியூர் கால்நடை மருத்துவமனை சார்பில் சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் 300 கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தடுப்பு ஊசி போடப்படது. திருவையாறு ஒன்றிய குழு தலைவர் அரசாபகரன் சிறந்த கன்று மற்றும் சிறந்த விவசாயிக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் கால்நடை துறை நோய் புலனாய்வு உதவி இயக்குனர் டாக்டர் பழநிவேல், கால்நடை டாக்டர் காமலநாதன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கண்டியூர் கால்நடை மருத்துவமனை டாக்டர் அருள்வேந்தன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்

No comments:
Post a Comment