திருவையாறில் தமிழறிஞர்நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருக்கோயில் திருப்பணி விழா நடந்தது.
திருவையாறு அருகே நடுக்காவேரியில் கிராமத்தில் தமிழறிஞர்
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருக்கோயில் திருபணிக்கான பாலாலயம் நடைபெற்றது.
திருவையாறு நடுக்காவேரியை சேர்ந்தவர் புலவர் நாவலர் மு.வேங்கடசாமி நாட்டார் இவர் ஏப்ரல் 2, 1884 -ல் பிறந்தார், மார்ச்சில் 28, 1944-ம் ஆண்டு சித்தியடைந்தார். இவர்
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர்.
சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர் இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது . அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவில் புனரமைப்பு பணிக்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பாலாலயம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், நடுக்காவேரி கிராம வாசிகள் மற்றும் சிவன் அடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment