தஞ்சை மண்டலக் கலை பண்பாட்டு மையம். சார்பில் மார்காழி இசை விழா.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை மண்டலக் கலை பண்பாட்டு மையம். சார்பில், தஞ்சாவூர் வட்டம், வெண்ணுற்றாகரை அருகில் உள்ள அருள்மிகு மணிகுன்றப் பெருமாள் திருக்கோளில் வளாகத்தில் புதன்கிழமை அன்று மார்காழி இசை விழா தொடங்கி நடைபெற்றது.
இவ்விழாவில் தஞ்சாவூர் மண்டாக கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் .சி. நீலமேகன் வரவேற்புரையாற்றினார், தொடர்ந்து தஞ்சைஅரண்மனை தேவஸ்தானம் உதவி ஆணையர் பொருளாளர் மேலாளர் திருமதி.கோ. கவிதா அவர்கள் குந்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்கள். திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் ப டமாமகேஸ்வரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இத்துவக்கவிழாவில் முதல் நிகழ்ச்சியாக திருக்காட்டுப்பள்ளி சா நடேசன், தவில் கல்யாணபுரம் கே .கார்த்திகேயன் ஆகியோர்களின் மங்கல் இசை நிழ்ச்சியும், தஞ்சை திருபுவனம் ஜி ஆமநாபன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சியும், தஞ்சை எஎஸ். அவந்தகிருஷ்ணன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், தஞ்சை பொன்னையா நாட்டியப் பள்ளி திருமதிந சசிகலா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், அன்பழகன் குழுவினரின் தேவார திருமுறை இசை நிகழ்ச்சியும், கலை. வளர்மணி திருமதி.க. காமாட்சி குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சியும், மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.
இத்தகவலை மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் திரு.சி. நீலமேகன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:
Post a Comment