தமிழ்நாடு நீர்வள நிலம் திட்டத்தின் கீழ் வேளாண்மைத் துறையில் விவசாயிகளுக்கு களப் பயிற்சி - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 4 January 2023

தமிழ்நாடு நீர்வள நிலம் திட்டத்தின் கீழ் வேளாண்மைத் துறையில் விவசாயிகளுக்கு களப் பயிற்சி

தமிழ்நாடு நீர்வள நிலம் திட்டத்தின் கீழ் வேளாண்மைத் துறையில் விவசாயிகளுக்கு களப் பயிற்சி


திருவையாறு வட்டாரம் மரூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் வேளாண்மைதுறைசார்பில் விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது. 


திருவையாறு வட்டாரத்தில்  தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெற்பயிர் கதிர் வெளிவரும் தருணத்திலும், கண்ணாடி இலை பருவத்திலும் உள்ளன. பயிரின் நடவு முதல் அறுவடை வரை வளர்ச்சி நிலைகளை கண்காணித்து முறையான நீர் மேலாண்மை, களை கட்டுப்பாடு முறைகள் இயற்கை எதிரி பூச்சிகளை பாதுகாத்தல், அதிக விஷமுள்ள பூச்சி மருந்துகளை பயன்படுத்தாமல் பூச்சி நோய் மேலாண்மைகளை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை விவசாயிகள் தங்கள் வயல்களில் தாங்களே மேற்கொண்டு அனுபவபூர்வமாக உணர்ந்திட ஒரு வாய்ப்பாக இந்த வயல்வெளி பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 


நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் ஆகியவற்றை விவசாயிகள் தாங்களே கண்டறிந்து உணர்ந்து கொள்ளவும், அவற்றை கட்டுப்படுத்தவும் அறிந்து கொள்கின்றனர் என்று வேளாண்மை உதவி இயக்குனர் திருவையாறு (பொ) சுஜாதா  செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். வயல்வெளி பள்ளி பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் கவிதா, வேளாண் அலுவலர் சினேகா, அட்மா மேலாளர் ஜெயபிரபா ஆகியோர் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad