அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ,சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சேவாலயா தொண்டு நிறுவனம், தனியார் அமைப்பு சார்பில், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உபகரண தொகுப்பு விநியோகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தஞ்சை இயக்கத தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், தனியார் நிறுவன மேலாளர் பிரியா தணிகாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பின்னர் சானிட்டரி பேடுகள், பாதாம், பேரீச்சம்பழம் போன்ற 4 பாக்கெட்டுகள் அடங்கிய 1,000 பாக்கெட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேவாலயா மருத்துவர் கோகுலகிருஷ்ணன், மண்டல கிளை மேலாளர் ரமேஷ், மண்டல கிளை மேலாளர் பிரபு, விநியோகஸ்தர் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சேவாலயா நிறுவனர் , நிர்வாக அறங்காவலருமான வி.முரளிதரன் வரவேற்றார். இறுதியாக பள்ளி முதல்வர் சித்ரா நன்றி கூறினார்.

No comments:
Post a Comment