தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள லிட்டில் ஸ்காலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் உரத்த சிந்தனை இணைந்து பயணிக்கும், 8-வது ஆண்டு பாரதி உலா 2022 நிகழச்சி,9.1.2023 காலை 9-30 மணி அளவில், உரத்த சிந்தனை மாவட்ட தலைவர், எஸ்.இராஜவேலு, முனைவர்,கிரிஜா லட்சுமிஆனந்தன், மற்றும் மாணவிகள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட உரத்த சிந்தனை தலைவர்,எஸ் ராஜவேலு தலைமை தாங்கினார், லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்,ஏ.வி. நடன சிகாமணி, முன்னிலை வகித்தார், லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர்,கே. சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார், உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்க பொதுச் செயலாளர்,உதயம் ராம் தொடக்க உரையாற்றினார்,
பாரதி தேச்சு பாரதத்தின் மூச்சு பேச்சரங்கம் நிகழ்வில் இப்பள்ளி,மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, ஒருவரை, ஒருவர் மிஞ்சுமலவிற்கு இவர்களுடைய பேச்சும், பாட்டும், நெகிழ வைத்தது. இப்போ போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பட்டுக்கோட்டை,
எழுத்தாளர், பிரபாகர் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்,உரத்த சிந்தனை தஞ்சை மாவட்ட செயலாளர்,தஞ்சை தாமு,தொகுத்து வழங்கினார், இந்த நிகழ்வில் அப்பள்ளியின் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர், நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர். கிரிஜா லட்சுமி ஆனந்தன் நன்றி கூறினார்.
மதியம் 2 மணி அளவில் நடைபெற்ற இரண்டாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அளவில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சுக்கு குறள் நெறி செம்மலும்,மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர். கா.பா. அறிவானந்தம் தலைமை தாங்கினார், உரத்த சிந்தனை தலைவர் எஸ். இராஜவேலு முன்னிலை வகித்தார்,மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி, நிர்வாக அதிகாரி,அ. கணேஷ்பிரபு வரவேற்புரையாற்றினார், உரத்த சிந்தனை பொதுச் செயலாளர், உதயம் ராம் தொடக்க உரையாற்றினார், பாரதி பாட்டு போட்டியில் கலந்து கொண்ட, மாணவமாணவிகள் அனைவருக்கும், எழுத்தாளர். பிரபாகர் பரிசுகளை வழங்கி போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டினர், நடைபெற்ற நிகழ்ச்சிகளை,
செயலாளர், தஞ்சை தாமு தொகுத்து வழங்கினார், நிகழ்ச்சியின் நிறைவாக,க, அய்யனார் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment