தஞ்சாவூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பானை, தட்டுகளில் பிச்சை எடுத்து பருவகால போராட்டம் நடந்தது. மாநில தலைவர் பிரபு தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் 2022-23 சம்பா பருவம் தொடங்கியுள்ளதால் கொள்முதல் பணியை மேற்கொள்ள பணி மூப்பு அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
கொள்முதல் செய்த 48 மணி நேரத்திற்குள் பதப்படுத்தப்படாத நெல் எடை இழப்புக்கு செயல்படாத துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் கண்காணிப்பாளர் பொறுப் பேற்க வேண்டும்.
சேமித்து வைக்கும் கண்மாய்களுக்காக திரட்டப்பட்ட நெல் தரையிறங்கிய மறுநாளே சம்மந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும்.
பருவகால தொழிலாளர்களின் ஊதியத்தை மாதந்தோறும் 1ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிச்சை பாத்திரங்களை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

No comments:
Post a Comment