திருவையாறில்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவையாறு வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தெற்கு
வட்டாரத் தலைவர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். வடக்கு வட்டார தலைவர் தமிழரசன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் பொழில் நாகராஜன், வடக்கு மாவட்ட பொருளாளர் முருகராஜ், மாவட்ட பொது குழு உறுப்பினர் பசுபதி முன்னிலை வகித்தனர்.
தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் சிறப்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட, வட்டார, பேரூர் நகர நிர்வாகிகள் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பேரூர் தலைவர் ராஜா பசுபதி நன்றி கூறினார். கூட்டத்தில் அமமுக, மாதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து காங்கிரசில் இணைந்தனர்.
கூட்டத்தில் ஈரோடு எம்எல்ஏ ஈவிகேஎஸ் திருமகன் மறைவுக்கு அஞ்சலி தீர்மானம், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து ஊடக நிருபர்களை தரக்குறைவாக பேசி வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

No comments:
Post a Comment