தஞ்சாவூர் ஜேசீஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 5 January 2023

தஞ்சாவூர் ஜேசீஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தஞ்சாவூர் ஜேசீஸ் புதிய நிர்வாகிகள்  பதவியேற்பு விழா 



தஞ்சாவூர் ஜேசீஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா குந்தவை தஞ்சாவூர் நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள லயன்ஸ் ஹாலில் நடந்தது. விழாவில், புதிய தலைவராக எம்.தமிழ்மணியும், துணைத் தலைவர்களாக நந்தினி, ரவிக்குமார், சக்திராஜா, கோபிநாத், டேவிட்ஆரோக்கியராஜ், வெங்கடேஷ், முரளிமுருகன், பிரபா கரன், வீரராஜ், செயலாளராக பொறியாளர் அரவிந்த், இணைச் செயலாளராக வைதீஸ்வரன், நிஷாந்தன் ஆகியோர் பதவியேற்றனர்.  பொருளாளர் மற்றும் இயக்குநர்கள் பதவியேற்றனர்.  


தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது: அடுத்த 4 ஆண்டுகளில் தஞ்சை மாநகராட்சி சென்னை மாநகராட்சி போல் வளர்ச்சி அடையும்.  அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.  


ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் சுமூகமாக நடந்து வருகிறது.  இன்னும் 6 மாதத்தில் தஞ்சாவூர் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் மழைநீர் வடிகால் வசதியுடன் தார் சாலை அமைக்கப்படும்.  நாங்கள் பதவியேற்ற பிறகு, தனியாரிடம் இருந்து ரூ.750 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டுள்ளோம்.  சிவகங்கை பூங்கா பணிகள் நிறைவடைந்து மே மாதம் திறக்கப்படும்.  யாரும் எதிர்பார்க்காத புதிய மாற்றத்தை நோக்கி தஞ்சை மாநகரம் நகர்கிறது.  இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.  


விழாவில் மண்டல தலைவர் பாலமுருகன் முன்னாள் மண்டலத் தலைவரும், அதிமுக வட்டாரச் செயலாளருமான ரமேஷ் எஸ்.எம்.ஏ 2022 மண்டலத் தலைவர் அன்பழகன் தஞ்சாவூர் காஸ்மோஸ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினார்.  ஜேசிஎஸ் நிர்வாகி டாக்டர் அசோக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
ரோட்டரி சங்க தலைவர் அன்புராஜா முடிவில் கிளிண்டன் சோஜசிங் ராயர், ரவிக்குமார், மண்டலச் செயலர் இந்துமதி, மண்டல இயக்குநர் ஆர்.வினோத், செயலர் அரவிந்த் நன்றியுரை வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad