பேராவூரணியில் மகாகவிபாரதியார் சிலைதிறப்பு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 21 January 2023

பேராவூரணியில் மகாகவிபாரதியார் சிலைதிறப்பு.

பேராவூரணியில் மகாகவிபாரதியார் சிலைதிறப்பு.



தஞ்சை மாவட்டம்  பேராவூரணியில் பாரதி கலை இலக்கிய பேரவை சார்பில் கட்டப்பட்ட மகாகவி பாரதியார் திருவுருவச் சிலையை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா திறந்து வைத்தார். பேராவூரணியில் சமூக முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பான பாரதி கலை இலக்கிய பேரவை அமைப்பின் சார்பில் கடந்த சில மாதங்களாக பாரதியாரின் திரு உருவச்சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் உருவச்சிலை 5 அடி மற்றும் பீடம் நான்கரை அடி என மொத்தம் ஒன்பது அரை அடி பாரதியாரின் உருவச்சிலை அமைக்கும் பணி நிறைவுற்ற நிலையில் இன்று தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா மகாகவி பாரதியாரின் திரு உருவசிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ் சிங்காரம் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். 


அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பாரதியாரின் வரலாறு மற்றும் அவருடைய சிறப்புகள் பற்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டி பேசினர். பின்னர் சாலமன் பாப்பையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பாட்டாளிகள் நெசவாளிகள் உட்பட அனைவருக்கும் பாடுபட்டவர் மகாகவி பாரதியார் அப்பேற்பட்டவரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம்முடைய கடமையாகும் மேலும் பாரதியார் கண்ட  புதுயுகம் இன்னும் அமையவில்லை அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என்றார்.

செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad