திருவையாறில் தை அமாவாசையை முன்னிட்டு காவிரி நதி புஷ்ய மண்டபத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை
திருவையாறில் தை அமாவாசையையொட்டி காவிரி ஆற்று புஷ்ய மண்டபப் படித்துறையில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடி படித்துறையில் புரோகிதா்களிடம் தா்ப்பணம் செய்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனா்.
பின்னர் அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பா் கோயிலுக்குச் சென்று வழிபட்டனா். கோயிலிலிருந்து ஐயாறப்பா் புறப்பட்டு, புஷ்ய மண்டபப் படித்துறைக்கு வந்து படித்துறையில் அஸ்திர தேவருக்கு அபிஷேகமும், தீா்த்தவாரியும் நடந்தது பின்னா், ஐயாறப்பா் நான்கு வீதிகள் வலம் வந்து கோயில் சன்னதி அடைந்தாா்.

No comments:
Post a Comment