திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை பெருவிழா.
திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா வரும் 6-ம் தேதி நடைபெறுவதையொட்டி ஆராதனை விழா நடைபெறும் பகுதிகளில் விழா முன்னேற்பாடுகள் குறித்து தஞ்சை ஆர்டிஒ ரஞ்சித் ஆய்வு மேற்கொண்டு தேவையான வசதிகள் செய்வதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.
திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா நடைபெறும் பகுதியில் விழாமேடை பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தஞ்சை ஆர்டிஒ ரஞ்சித் ஆய்வு மேற்கொண்டு வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி உள்ளிட்ட தேவையான வசதிகள், சிறப்பு விருந்தினர்கள் வருகை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், விழா நடைபெறும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தேவையான வசதிகளை செய்வதற்கு ஆலோசனை வழங்கினார். திருவையாறு தாசில்தார் பழனியப்பன், பேரூராட்சி துணைத்தலைவர் நாகராஜன், போலீஸ் டிஎஸ்பி ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment