போட்டியில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, ஒற்றை வால், இரட்டை வால், சுருள் வால், வேல் கம்பு, மான் கொம்பு, ஆகிய சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் இப்போட்டி நடைபெற்றது. பாபநாசம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பேரூர் செயலாளரும் பேரூராட்சி கவுன்சிலருமான பிரேம்நாத் பைரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் குமார் விழாவினை கொடி அசைத்து துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசினையும் சுழல் கோப்பையையும் வழங்கினார். விழாவில் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் கீர்த்தி வாசன் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் திவாகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆனந்தி, பாபநாசம் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் செல்வராஜ், பாவை தமிழ் மன்ற தலைவர் நவநீதகிருஷ்ணன், செயலாளர் கோடையிடி குருசாமி,தமிழ் மன்ற பொறுப்பாளர் அஷ்ரப் அலி, தஞ்சாவூர் கணினி பயிலக உரிமையாளர் தடா அப்துல் கலாம், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் குழந்தைவேல், சிலம்ப ஆர்வலர்கள் சோழன், சிவகுமார், உடற்கல்வி ஆசிரியர் அப்துல் மஜீஸ், ஆலோசகர்கள் சண்முகம், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment