தஞ்சையில் நவீன சுயவரம் நிகழ்ச்சி... 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 21 January 2023

தஞ்சையில் நவீன சுயவரம் நிகழ்ச்சி... 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தஞ்சையில் நவீன சுயவரம்  நிகழ்ச்சி. 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!



தஞ்சையில் நவீன சுயவரம் நிகழ்ச்சி  பெசன்ட் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்   சீனி. சந்திரசேகர் தலைமை தாங்கினார் சுரேஷ் நாட்டார் முன்னிலை வகித்தார் இதில் அகில இந்திய கபடி கோச் சூரக்கோட்டை பாஸ்கர் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். 
சுயம்வரம் நிகழ்ச்சியில் ஏராளமான
மணமகன் மற்றும் மணமகள்களின் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுக்கு பொருத்தமான இணையை தேர்வு செய்தார்கள். பெற்றோர் மேடைக்கு வந்து தங்களின் மணமகன் மணமகள் ,சுயவிவரம்,எப்படிப்பட்ட வரன் வேண்டும், தங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து பேசினர்.


ஒரு சில பெற்றோர்கள், தாங்களாகவே அங்கு வந்து தங்களுக்கு பொருத்தமான வரனை தேர்வு செய்தனர்.ஒருசில மணமகன் தாங்களாகவே அங்கு வந்து தனக்குத் தேவையான வரனை  கேட்டு மேடையில்பேசினர். இந்நிகழ்ச்சியில் உறவின் திருவிழா என்ற அமைப்பின் மூலம் வெற்றிகரமாக நடை பெற்றது . இந் நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக  நடத்தப்பட்டது எனபது குறிப்பிட்டுத்தக்கது.

மேலும் தமிழகம் முழுவதும் இலவசமாகவே நடை பெறும் இது ஒரு இலவச சேவை அதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தலைவர் சீனி. சந்திரசேகர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad