பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் நவீன ஆடை வடிவமைப்பு கண்காட்சி விழா.
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் நவநாகரிக மற்றும் ஆடை வடிவமைப்பியல் துறையில் சார்பாக ஜனவரி 30மற்றும் 31-ம் தேதிகளில் பிரத்யேக கண்காட்சி நடைபெற்றது. இன்று முதல் நாளில் கல்லூரி மாணவியர்களால் உருவாக்கப்பட்ட அணிகலன்களும் அலங்கார உடைகளும்,பல்வேறு விதமான பெயிண்டிங், கண்கவரும் வகையில் பேன்சி பொருட்கள் ,வீட்டு அலங்கார பொருட்கள் ,குழந்தைகள் மற்றும் பெரியவர் ஆடைகள் போன்ற பலவேறு பொருட்களை அவர்களே நுணுக்கமான முறையில் உருவாக்கி 15 கடைகள் மூலம் பொருட்களை விற்கின்றனர்.
கல்லூரி மாணவிகளின் பார்வைக்காக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நவநாகரிக ஆடை கண்காட்சினை கல்லூரி இயக்குனர் அருட் சகோதரி டெரன்ஷியா மேரி, கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் காயத்ரி, துறைத் தலைவி ஜி கீதா மற்றும் துறை தலைவர்களும் இணைந்து ஒவ்வொரு அரங்குகளையும் துவக்கி வைத்தார். இதில்30 அடி நீளமுள்ள பிரம்மாண்டமான ஆடையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதை மாணவிகளே ஏழு நாட்களில் உருவாக்கப்பட்டது. பார்வையாளர்களிடயே கண்ணை கவரும் விதமாக அமைந்து இருந்தது. இக்கண்காட்சியானது மாணவியர்களை ஊக்குவிப்பதற்காகவும் அவர்களது திறனை வெளிக்கொண்டு வருவதற்காகவும் நடைபெற்றது.
மேலும் இக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

No comments:
Post a Comment