தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் வி. திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
தமிழர் திருநாளின் சிறப்பினைப் பற்றியும், உழவுத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த திருநாள் அமையும் என்று கூறினார், மேலும் இப்பொங்கல் விழாவைப் போல் வீட்டிலும் தங்கள் குடும்பத்தோடு பொங்கல் வைத்து கொண்டாடுங்கள் என்றும், தாங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கி நிரம்பி வழியட்டும், சந்தோசமும் பெருகட்டும், வாழ்வில் நிம்மதி பெருகட்டும் என்றார்.
மேலும் இந்தாண்டுயிருதியில் தேசியக் தரமதிப்பீட்டுக் குழு வருகைதரயிருப்பதால் அனைத்து கல்வியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு அயராது உழைக்க வேண்டும் என்று எனத் தனது தலைமையுரையில் கேட்டுக்கொண்டார்கள்.
இவ்விழாவில். முனைவர் சி. தியாகராஜன், மதிப்புயர் பதிவாளர் (பொ), மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், புலத்தலைவர்கள், கல்விநிலைப் பணியாளர்கள் மற்றும் துணைப்பதிவாளர், அலுவல்நலைப் பணியாளர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா. சு. முருகன், மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றார்கள். இவ்விழாவின் முடிவில் விழாவிற்கு பொங்கல் பரிசு வழங்கிய மாண்பமை துணைவேந்தரவர்களுக்கு பணியாளர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment