பறவைகள் சரணாலயம் கள்ளபெரம்பூர் ஏரியை ஏலம் விடக்கூடாது-ஏகேஆர்.ரவிச்சந்தர் கோரிக்கை - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 21 January 2026

பறவைகள் சரணாலயம் கள்ளபெரம்பூர் ஏரியை ஏலம் விடக்கூடாது-ஏகேஆர்.ரவிச்சந்தர் கோரிக்கை


 பறவைகள் சரணாலயம் கள்ளபெரம்பூர் ஏரியை ஏலம் விடக்கூடாது-ஏகேஆர்.ரவிச்சந்தர் கோரிக்கை


பறவைகள் சரணாலயம் என் அறிவிக்கப்பட்ட கள்ளபெரம்பூர் ஏரியை ஏலம் விடக்கூடாது என

தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் ,தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர்   கோரிக்கை  விடுத்துள்ளார்பின்னர் அவர் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்புரம்பூர் கிராமத்தில் சோழர்கள் காலத்தில் வெட்டப்பட்ட மிகப்பெரிய பாசன ஏரி உள்ளது. வெண்ணாற்றிலிருந்து பிரியும் ஆனந்த காவேரி வாய்க்கால் மூலம் இந்த ஏரிக்கு தண்ணீர் வருகிறது. 642 ஏக்கர் பரப்பளவு உள்ள மிகப்பெரிய ஏரி இதுவாகும். இந்த ஏரியின் மூலம்1) கள்ளப் பெரம்பூர், 2) ராயந்தூர்,3) தென்னங்குடி, 4) பிள்ளையார் நத்தம், 5) சீராளூர், 5) சக்கர சாமந்தம் ஆகிய ஆறு கிராமங்களுக்கு சுமார் 2882 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு நீர் பாசன வசதிக்கு பயன்பட்டது இந்த மிகப்பெரிய கள்ளபெரம்பூர் ஏரி.


மேற்படி கள்ள பெரம்பூர் ஏரியை கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்தபோது சிறப்புமிக்க திட்டமான குடிமராமத்து திட்டம் மூலம் ரூ 83 லட்சம் செலவில் தூர்வாரி தெற்கு கரையை பலப்படுத்தினார்கள். 642 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரியையும் தூர்வார போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் தூர் வாரும் பணிகள் தொடர்ந்து செய்யப்படவில்லை. விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு 2022-23 நிதியாண்டில் ரூ 3 கோடி செலவில் தூர் வாரும் பணியை செய்தார்கள். தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையால் கள்ளபெரும்பூர் ஏரி பறவைகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டு அதற்கான பெயர் பலகை நிறுவப்பட்டது. இந்நிலையில் ஆண்டுதோறும் நீர்வளத் துறையால் காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, போன்ற பாசன ஆறுகளில் மீன் பசலி ஏலம் விட்டு மீன் பிடிக்கப்பட்டு வருகிறது.உயர் நீதிமன்றம் பறவைகள் சரணாலாயம் அமைக்கப்பட்ட இடத்தில் மீன் குத்தகை ஏலம் விடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் கள்ளப்புரம்பூர் ஏரி மீன் குத்தகை ஏலம் விடப்போவதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளதாக தகவல் வருகிறது. எனவே மாண்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் கள்ளபெரும்பூர் ஏரியில் ஏலம் விட்டு தண்ணீர் இறைத்து மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தி பறவைகள் சரணாலயம் சிறப்பாக அமைந்து மேற்படி கள்ளபெரம்பூர் ஏரி வடுவூர் போல ஒரு சுற்றுலா தளமாக அமைய முயற்சிக்குமாறு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் பணிவோடு வேண்டுகிறேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad