தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் பொங்கல் கலைத் திருவிழா
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் பொங்கல் கலைத் திருவிழா இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் கலை நிகழ்ச்சி நிகழ்த்திய கலைஞர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் முதல் நிகழ்ச்சியான நர்த்தனாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்வும், அம்பேத்குமார் கலைக்குழுவினரின் தப்பாட்டம், கண்ணந்தங்குடி மலையேறி அம்மன் பெண்கள் களைக்குழுவினரின் கிட்டி கோலாட்டம், கும்பகோணம் சங்கமம் கலைக்குழுவினரின் நாட்டுப்புற ஆடல் பாடல் மற்றும் சாமியாட்டக் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் 1நிகழ்ச்சியான ருத்ராலயா நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்வும், வெட்ட வெளிப்பாட்டுக்காரன் கலைக்குழுவினரின் கிராமிய ஆடல் பாடல் மற்றும் மாடாட்டம், மயிலாட்டமும், தஞ்சாவூர் நாட்டுப்புற நையாண்டி மேளம் கலைக்குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சியும், தஞ்சை மல்லிகா பிரகாஷ் கலை குழுவினரின் பல் சுவை கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
க. ஈஸ்வரன் செய்திருந்தார் இதில் திட்ட அலுவலர்கள் கலையாசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இத்தகவலை தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ம. இராஜாராமன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment