பேராவூரணியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 5 September 2025

பேராவூரணியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

 


பேராவூரணியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்


பேராவூரணி, செப்.5 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில், 1 முதல் 9 ஆவது வாா்டு வரையிலான பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்  நடைபெற்றது.


முகாமுக்கு, பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். 


நிகழ்ச்சியில், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், திமுக பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், இலக்கிய அணி அமைப்பாளர் ஆனந்த்ராஜ், வர்த்தக சங்க செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் மணிகண்டன், பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, பேரூராட்சி செயல் அலுவலர் இரா.இராஜா வரவேற்றார். நிறைவாக, துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமரகுரு நன்றி கூறினார். 


இம்முகாமில், மகளிர் உரிமைத்தொகைக்கு 385 விண்ணப்பங்களும், குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 407 மனுக்கள் என மொத்தம் 792 மனுக்களை பொதுமக்கள் அரசு அலுவலர்களிடம் வழங்கினர்.


மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் ஏற்பாட்டில், ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 44 பேரை நலவாரியத்தில் இணைக்க விண்ணப்பிக்கப்பட்டது. 


பேராவூரணி த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad