கந்தர்வ கோட்டை வித்ய விகாஸ் பள்ளியில் இலவச இயற்கை மருத்துவ பயிற்சி முகாம்
தஞ்சாவூர் :கந்தர்வ கோட்டை வித்ய விகாஸ் பள்ளி காணொளி அரங்கில் இயற்கை மருத்துவ பயிற்சி முகாம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது
இம்முகாமை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் திருமதி வெண்ணிலா தலைமையேற்று துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தஞ்சை ஹீலர் எஸ் .பாலமுருகன் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பில் மனமே மருத்துவர்
உணவே மருந்து ,எல்லா வகை பிரச்சனைகளுக்கும் மனம் தான் முதன்மை காரணம். மனதை பக்குவப்படுத்தினால், அனைத்து உடல் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். உணவு, உணர்ச்சி, உடல், உயிர் ஆகிய நிலையில் உடலைப் பராமரிக்கலாம். மருந்தின்றி பல்வேறு நோய்களை குணப்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் இருபாலரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தொடர்ந்து ஆசிரியர்கள் தொடர்ந்து 4 மணி நேரம் பயிற்சி முறைகளை ஆர்வத்துடன் கேட்டறிந்ததோடு, உடல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கேட்டறிந்து கொண்டனர் நிறைவில் தமிழாசிரியர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்
No comments:
Post a Comment