பேராவூரணி ஆதனூரில் கிறிஸ்துமஸ் விழாவில் இயற்கை ஆர்வலர் சுந்தரம் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 25 December 2024

பேராவூரணி ஆதனூரில் கிறிஸ்துமஸ் விழாவில் இயற்கை ஆர்வலர் சுந்தரம் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு.

.com/img/a/

IMG-20241226-WA0049

பேராவூரணி ஆதனூரில் கிறிஸ்துமஸ் விழாவில் இயற்கை ஆர்வலர் சுந்தரம் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு.



பேராவூரணி டிச-25 தஞ்சை மறைமாவட்டம், ஆதனூர் பங்கு, புனித அன்னாள் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் அனைவரும் இரவு தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்து பிறப்பின் திருப்பலியில் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து காலை 8:30 மணி அளவில் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 45 ஆண்டுகளாக பொது இடங்கள், தேவாலயம், திருக்கோவில்கள், பள்ளிவாசல் என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை தானே சொந்த செலவில் நடவு செய்து, அதை பாதுகாத்து மரங்களாக உருவாக்கி பழங்கள் கொடுக்கிற நிலையில் தனது இயற்கை சேவையை செய்து வரும் இயற்கை ஆர்வலர் கே.எம்.சுந்தரம், ஆதனூர் கிராமத்திற்கு வந்து தனது சொந்த செலவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார். அருகில் வணக்கம் தமிழகம் செய்தியாளர் முனைவர், வேத .குஞ்சருளன், ஆதனூர் கிராம பொருளாளரும், புனித அன்னாள் தேவாலயத்தின் பொருளாளருமான ரயில்வே ஓய்வு அ. அன்பானந்தம், ஏனாதிக்கரம்பை கே.ராமநாதன், மகாத்மா காந்திஜி நற்பணி மன்ற பொருளாளர் எஸ். வில்லியேசன் ஆகியோர் உள்ளனர்.


பேராவூரணி த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad