கும்பகோணத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்..
கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் திறந்து வைத்தார்....
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்துகொண்டு மருத்துவ முகாமில் தொடங்கி வைத்தார்.
முகாமில் கண் மருத்துவம், பல் மருத்துவம், தோல் மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் குறித்து மருத்துவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கலாராணி, மருத்துவர்கள் ரபீக் ,சுஜிதா ,வசந்த் ,நிஷா , மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் , மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment