இலவச கண் சிகிச்சை முகாம்:350 பேருக்கு பரிசோதனை
கும்பகோணம் ; கீழக் கொட்டையூரில் நடந்த இலவச கண்சிகிச்சை முகாமில், 350 பேர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ,தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகிய இணைந்து இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது,
கும்பகோணம் அருகே சுவாமிமலை சாலையில் உள்ள கீழக் கொட்டையூர் வள்ளலார் தொடக்கப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் லயன் இரவி துவக்கி வைத்தார். தலைவர் லயன் டி.விஜயன் , சங்க செயலாளர் லயன் கணேசன் ,பள்ளியின். தலைவர் தயாளன் , செயலாளர். பழனிச்சாமி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சங்க முன்னால் தலைவர்கள் லயன் மருதையன் லயன் இராஜேந்திரன். லயன் பாலசுப்பிரமணியன் , சங்க உறுப்பினர்கள் பொருளாளர் லயன் அருண். பொருப்பாளர் குமார் சிவராமன் கிருஷ்ணன். லயன் பெருமாள். லயன் அமுதச்செல்வி லயன் புவனேஸ்வரி. மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சேவை செய்தனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொது மக்களுக்கு கண்களை பரிசோதித்தனா். நகரப்புற கிராமப்புற பொது மக்கள் சேர்ந்த சேர்ந்த 350 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 60 நபர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. இதில் 51 பேர் கண் புரை கண்டறியப்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.
முகாமுக்கு சேவையாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் என் எஸ் எஸ் மாணவர்களுக்கும் இடமளித்த வள்ளலார் கல்வி குழுமத்துக்கும் நன்றிகளின் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் சேவை பணியாற்றிய அனைவருக்கும் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் மரியாதை நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது
No comments:
Post a Comment