தஞ்சையில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்க, மாவட்ட செயற்குழு கூட்டம்,
தஞ்சாவூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்க, தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம், பெசன்ட் அரங்கில், ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, ஏ.கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கு.ரவி,பாபு,திருமதி. முனியம்மாள், திருமதி. லெட்சுமி (எ) அம்மாப்பொண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் பி.ஆனந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார், நடைபெற்ற தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, சிறப்பு விருந்தினர்களாக: தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர், க.அறவாழி, தமிழ்நாடு ஜெனரல் எம்பிளாய் யூனியன் மாநில பொதுச்செயலாளர், சி.கலியமூர்த்தி, தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர், தரும.கருணாநிதி, அரசு பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் கா.முருககுமார் வட்டாட்சியர் வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர், M.செந்தில்குமார், வட்டாட்சியர், ஆர்.வி.என். தம்புராஜ், ஜெனரல் எம்பிளாய் யூனியன் மாவட்ட தலைவர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர், நிகழ்ச்சியின் நிறைவாக,' நாகராஜன் அவர்கள் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு மாநகராட்சியில், 754/- ரூபாயும், ஓட்டுநர்களுக்கு நாளொன்றுக்கு மாநகராட்சியில், 792/- ரூபாயும், குடிநீர் விநியோகப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு மாநகராட்சியில். ரூ.754- குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்பட வேண்டும் தூய்மைப் பணியாளர்களையும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர், நல வாரியத்தில் உறுப்பினர் ஆக்கி, நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என உள்ளிட்டபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
No comments:
Post a Comment