கும்பகோணத்தில் அதிமுக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்
கும்பகோணம் மாநகரம் மகாமகம் பகுதி கழக அதிமுக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மகாமகம் பகுதி கழகச் செயலாளர் ராஜு தலைமையில் நடைபெற்றது. பகுதி கழக அவைத் தலைவர் ஜெயசீலன் வரவேற்றார். மாநகர கழக செயலாளர் ராம. ராமநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கழக அமைப்பு செயலாளர் திருச்சி மனோகரன், தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பாரதிமோகன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சேகர், அம்மா பேரவை இணைச் செயலாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த கூட்டத்தில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கும்பகோணம் அறிவழகன், திருவிடைமருதூர் தெற்கு முத்துக்கிருஷ்ணன், மாநில கைத்தறி பிரிவு செயலாளர் லெனின், தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மண்டல செயலாளர் அறிவொளி, பொற்றாமரை பகுதி கழக செயலாளர் குமரேசன், மகாமகம் பகுதி கழகத் துணைச் செயலாளர் ஜான், முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னையன், மாவட்ட பிரிவு செயலாளர்கள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, கவிதா ஸ்ரீதர், ராஜேந்திரன், சரவணன், கஞ்சனூர் பிரபு, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ராஜ நடராஜன், பகுதி கழகத் துணைச் செயலாளர் பெருசு ராமமூர்த்தி, ஐடி விங்க் மண்டல இணை செயலாளர் ரமேஷ்குமார், துணை செயலாளர் பாலாஜி, மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் விக்கி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநகர அம்மா பேரவை செயலாளர் அயூப்கான் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment