மருங்கப்பள்ளம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30 லட்சம் கடனுதவி எம்எல்ஏ வழங்கினார்...
பேராவூரணி, ஆக.7 தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மருங்கப்பள்ளம் பல்நோக்கு சேவைக் கட்டடத்தில், மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
இதில், உதவித் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பத்மஜோதி, மகளிர் திட்ட உதவி அலுவலர் பாலன், பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், ஒன்றியக் குழு துணை தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், வாத்தலைக்காடு, நாடியம், வீரியங்கோட்டை, கெங்காதரபுரம், கரம்பக்காடு, செருபாலக்காடு ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 8 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்தனர்.
முகாமில், கொள்ளுக்காடு அம்மன் சுய உதவிக் குழுவுக்கு ரூபாய் 20 லட்சம், அழகியநாயகிபுரம் காளியம்மன் சுய உதவிக் குழுவிற்கு ரூபாய் 10 லட்சம் வங்கி நேரடிக் கடனை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் வழங்கினார்.
பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment