ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது:: திரளான பெண்கள் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம்:மருத்துவக் கல்லூரி வல்லம் சாலையில் உள்ள சரபோஜி நகரின் பூர்விகமாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக் கிழமையில் பிரமாண்டமான முறையில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ காமாட்சி அம்மன் சன்னதியில் மிகப்பெரிய அளவிலான சுவாமிநாதன் குருக்கள் தலைமையிலான திருவிளக்கு மந்திரம் ஒதி பூஜையை வழிநடத்தினர் . பின்னர் அந்த விளக்கு கோயிலைச் சுற்றி எடுத்து வரப்பட்டு அருகிலுள்ள மேடையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து குத்து விளக்கிற்கு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. "குத்துவிளக்கில் தீபம் ஏற்றியதும் அங்கு கூடியிருந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த விளக்குகளில் தீபம் ஏற்றி, குங்குமம் அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து மகரதீபாராதனை காட்டப்பட்டது.". , இவ்விழா ஏற்பாடுகளை தலைவர் சித்திரபுத்திரன்,செயலாளர் அருணாசலம்,ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment