கொல்லாங்கரையில் இலவச மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அருகே உள்ள கொல்லாங்கரை கிராமத்தில் முதுகலை சமூகப்பணியாய்வுத்துறை,திருச்சிபிஷப் ஷீபர் கல்லூரி (தன்னாட்சி),செட் இன்டியா, மற்றும் திருச்சி சிஎஸ்ஐ மிஷன் பொது மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாமை திங்கட்கிழமை நடத்தியது.
முகாமுக்கு திருச்சி பிஷப் ஷீபர் கல்லூரி இணை பேராசிரியர் முனைவர் ம.டேனியல் சாலமன் , தஞ்சாவூர் செட் இன்டியா நிர்வாக இயக்குனர் பி. பாத்திமாராஜ் ஆகியோர் தலைமை வகித்தாா். திருச்சி சிஎஸ்ஐ மிஷன் பொது மருத்துவ ஆலோசகர் டாக்டர் ராஜ்குமார்,பிஆர்ஓ டாக்டர் ஆன்னிகிறிஸ்டோபெல் ஆகியோர் முகாமை தொடங்கிவைத்தாா்.
யூ கே டாக்டர் ஷிபுவர்க்கி,தஞ்சாவூர் மேக்ஸி விஷன்,கண் ஆய்வாளர் டாக்டர்திவாகர் பாலு, கொல்லாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் பி குணசேகரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிஎஸ்ஐ மிஷன் பொது மருத்துவமனை மருத்துவா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா். முகாமில் கண் நோய்கள், சா்க்கரை வியாதி, காது, மூக்கு, தொண்டை, தோல், சம்பந்தமான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்.
தொடர்ந்து தாய்ப்பாலின் மகத்துவம் என்ற தலைப்பில் தஞ்சாவூர்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் டாக்டர் பி.தேவி பேசியதாவது: குழந்தைக்கான முதல் உணவு, தாய்ப்பால். குழந்தையின் உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய, புரதச்சத்து நிறைந்த தாய்ப்பால் மிக அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்த குழந்தை என்றால் இரண்டு மணி நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது அவசியம்.முதல் ஆறு மாதத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு, தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை. பீடிங் பாட்டில் உபயோகப்படுத்தாமல் ஸ்பூன் மற்ற உபகரணங்கள் பயன்படுத்தலாம்.
பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர்வரை அருந்த வேண்டியது அவசியம். சத்தான, சரிவிகித உணவினை வேளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்."என்றார்.இதில் 100 க்கு மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment