தஞ்சாவூரில் இண்டர்நேஷனல் அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பரிசுகளை குவித்த மானாமதுரை வீரர்கள் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 11 August 2024

தஞ்சாவூரில் இண்டர்நேஷனல் அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பரிசுகளை குவித்த மானாமதுரை வீரர்கள்


தஞ்சாவூரில் இண்டர்நேஷனல் அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பரிசுகளை குவித்த மானாமதுரை வீரர்கள்.


தஞ்சாவூரில் இண்டர்நேஷனல் அளவில் கராத்தே போட்டி நடைபெற்று நிறைவடைந்தது. நடந்து முடிந்த இப்போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு, ஆர். ஹரிஹரன் 7 வயது கட்டா பிரிவில் முதல் பரிசும், சண்டை பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றார். ஜெ. சுஜித் வயது 8 கட்டா பிரிவில் முதல் பரிசும், சண்டை பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றார். எம். ஸ்ரீ பிரணவ் வயது 9 கட்டா பிரிவில் முதல் பரிசும், சண்டை பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றார்.

 

எம். விஹாசினி என்ற மாணவி வயது 10 கட்டா பிரிவில் முதல் பரிசும், சண்டை பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றார். கே. கணேஷ் பிரபு வயது 11 கட்டா பிரிவில் இரண்டாம் பரிசும், சண்டை பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றார். து. ஜெகதீஷ் வயது 12 கட்டா பிரிவில் இரண்டாம் பரிசும், சண்டை பிரிவில் முதல் பரிசும் பெற்றார். பா. ஜெய்வந்து வயது 13 கட்டா பிரிவில் முதல் பரிசும் சண்டை பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றார். எம். கவின் வயது 13 கட்டா பிரிவில் முதல் பரிசு சண்டை பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றார். 


வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் மானாமதுரை நகர் மன்ற துணை தலைவர் பாலசுந்தரம் மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். கராத்தே பயிற்சியாளர் சிவ. நாகர்ஜுன் மற்றும் இளம் பயிற்சியாளர் ஆர். லலினா மாணவர்களுக்கு தங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவரவர் பயிலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad