கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வாயில் முழக்கப் போராட்டம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 4 July 2024

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வாயில் முழக்கப் போராட்டம்

.com/img/a/

 

IMG-20240704-WA0181

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வாயில் முழக்கப் போராட்டம் 


தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்தவாறு ரூபாய் 50 ஆயிரம் சம்பளமாக வழங்க வேண்டும். அரசாணை 56 ஐ அமல்படுத்த வேண்டும். 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும். பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். பணியில் இருந்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 


எழுத்து தேர்வை ரத்து செய்ய வேண்டும். கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, தமிழ்நாடு அரசுக்கும், உயர் கல்வித்துறைக்கும்  வலியுறுத்தி, அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சார்பில், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பாக வாயில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. 


இந்தப் போராட்டத்திற்கு கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத் தலைவர்  சு.நித்தியசேகர் தலைமை வகித்தார். செயலாளர் வினோத், பொருளாளர் 


எஸ்.ஜமுனா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 


இதில், 16 பெண்கள் உள்ளிட்ட 23 கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad