தஞ்சாவூர் அடுத்த பழங்கொண்டார் குடிக்காடு கிராமத்தில் மரம் நடும் விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 1 July 2024

தஞ்சாவூர் அடுத்த பழங்கொண்டார் குடிக்காடு கிராமத்தில் மரம் நடும் விழா


தஞ்சாவூர் அடுத்த பழங்கொண்டார் குடிக்காடு கிராமத்தில் மரம் நடும்  விழா  


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ,கோனூர் நாடு, பொய்யுண்டார் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பழங்கொண்டார்  குடிக்காடு கிராமத்தில் ஸ்ரீ பெரியநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பாக சாலை ஓரத்தில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடு பணி நடைபெற்றது. இந்தப் பணிகளை அறக்கட்டளை செயலாளர் தொழில் அதிபர் உத்திராபதி  தலைமையில் மரம்  நடும் விழா தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து அறக்கட்டளையின்  தலைவர் பொருளாளர்  உறுப்பினர், பொதுமக்கள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு, இயற்கையை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். "


தொழிலதிபர் உத்தரபாபதி பேசுகையில்  பால பழனி ஆண்டவர் ஆலயம் அருகில்  சுத்தம் செய்து மரக்கன்றுகள் நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்தோம். இதுதான் நாங்கள் நட்ட முதல் மரங்கள். பிறகு,கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், சுமார் 100க்கும் மேற்பட்ட மரங்கன்றுகளை நட்டு  வைத்துள்ளோம். ஒரு வருடத்தில்  5000 மரக்கன்றுகள்  நடுவதற்கான ஏற்பாடு செய்துள்ளோம்."மரம் வளர்ப்பது என்பது  நமக்கு அனைத்தையும் அளித்த  இயற்கைக்கு நாம் செய்யும் சிறு கைமாறு என்றும்,  மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதை சரிவர பேணிப் பாதுகாப்பதும் நமது கடமையாகும் என்றார் "


இது கலந்து கொண்ட  தலைவர் ஜீவா ஞானசேகர், ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், துணைப் பொருளாளர் சடாச்சரம், அறங்காவலர்கள் முருகேசன் கார்த்தி சிவானந்தம் அறக்கட்டளை உறுப்பினர்கள் தமிழரசி அன்புச்செல்வி தினேஷ் தவமூர்த்தி முருகன் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டார்கள் 

No comments:

Post a Comment

Post Top Ad