பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு 2 வாலிபர்கள் பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தின்கீழ் இருவரும் கைது
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் தெரு புது ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி (23), அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் (18) ஆகிய இருவரும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்தபோது அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாரதி பாலியல் வன்புறவு செய்துள்ளார். அதேபோல் பாதுகாப்பிற்காக அழைத்துச் சென்ற மதியழகனும் சிறுமியின் வீட்டிற்குச் சென்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புறவு செய்துள்ளார்.
இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என அந்த சிறுமியை மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த போது புகாரை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் படி விசாரணை மேற்கொண்ட நிலையில் மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத் , பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சரளா என்பவரை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment