திருவையாறு ஔவை மழலையர் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 10 June 2024

திருவையாறு ஔவை மழலையர் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர்

 


திருவையாறு ஔவை மழலையர் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர்



பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆர்வத்துடன் பள்ளிக்குத் திரும்பிய மாணவ மாணவிகளை திருவையாறு  ஔவை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.


மாணவர்களை வரவேற்கும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஔவை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் தாளாளர்  மற்றும் தலைமையாசிரியர் ஆகியோர் தலைமையில்  பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய வகுப்புகள் மாறுவதனால் விருது வழங்கி மற்றும் இனிப்புகள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்."


பின்பு பள்ளி தலைமை ஆசிரியர் பேசியதாவது;: திருவையாறு ஔவை மழலையர் & தொடக்கப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மிகச்சிறப்பாக ஒளவை அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வருகிறது.குழந்தைகளின் பல்வகை அறிவுசால் திறன்களை வளர்க்கும் வகையில் திறன்மிகு கல்வி, அறிவியல் முறைக்கல்வி, அறநெறிக்கல்வி, கணினி வழிக்கல்வி, செயல் முறைக்கல்வி, கலைவளர் கல்வி போன்ற பல்வகை நிலையில் தகுதியான, திறமையான ஆசிரியர்களைக் கொண்டு இப்பள்ளி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.


'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' போன்ற ஔவையாரின் அறநெறிகளைப் பின்பற்றும் வகையில் பள்ளியின் முகப்பிலுள்ள ஒளவைத் திருக்கோயில், குழந்தைகளுக்கு வழிகாட்டும் அறிவாலயமாகத் திகழ்கிறது. 'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்ற உலக நீதிக்கு ஏற்ற வகையில் நாள்தோறும் ஔவையாரின் அறநெறிகளை வழிபாட்டு மொழிகளாகக் கொண்டு இப்பள்ளி அறஞ்சார்ந்த மாணவர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தொடக்க நிலையில் ஔவையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன். மூதுரை அல்லது வாக்குண்டாம். நல்வழி மற்றும் தனிப்பாடல்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு நீதிநூல்கள் தனிப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது.


தஞ்சாவூர் பிரிலியண்ட் அகாடமியால் கம்ப்யூட்டர் கல்வியும், மதுரை கிரியேட்டிங் கிட்ஸ் நிறுவனத்தால் அபாகாஸ் கல்வியும், 3 எச் நிறுவனத்தால் மழலையர் கல்வியும், பெங்களூரு லாஸ்ய மேளா நாட்டியப்பள்ளி மூலமாக பரதநாட்டியம் மற்றும் இசை, ஓவியப்பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. தண்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கராத்தே மற்றும் சிலம்பாட்டப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு, குழந்தைகளுக்குப் பல்வகைத் திறனறிப் பயிற்சிகள் பயிற்று விக்கப்படுகின்றன.


நாவன்மைப் பயிற்சி மலேசியா சிலாங்கூர் மாநிலத் தலைமை ஆசிரியர் மன்றம், கனடா உதயன் தமிழ் வார இதழ் இணைந்து மாதந்தோறும் இணையவழியில் நடத்தப்படும் நாவன்மைப் பயிற்சியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று பல்வகைச் சான்றிதழ்களைப் பெற்று வருகின்றனர்.


இத்தகு மழலையர் சிறப்புமிகு முன்னோடி முன்மாதிரிப் பள்ளியாக ஒளவை தொடக்கப்பள்ளி நல்ல குழந்தைகளை, அறிவில் சிறந்த & குழந்தைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிட்டுத்தக்கது என கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad