பேராவூரணி அருகே களத்தூரில் 10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 25 May 2024

பேராவூரணி அருகே களத்தூரில் 10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா.


 பேராவூரணி அருகே களத்தூரில் 10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா.



பேராவூரணி : தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் ஊக்குவித்த தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி கோ.சுகன்யா தலைமை வகித்தார். துணை தலைவி த.சசிகலா, ஒன்றிய குழு உறுப்பினர் பா.பெரியநாயகி, கிராம கமிட்டி பொருளாளர் சு.ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வன், முருகேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரா.ரவிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சு. பிரியா மணி முதல் மதிப்பெண் 490.

கா.கல்கி இரண்டாவது மதிப்பெண் 486.

மூன்றாவது மதிப்பெண் மூ. துஷ்மிதா 483. 


ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும்400 க்கு மேல் 15 மாணவர்கள் மதிப்பெண்கள்எடுத்துள்ளனர். கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் மாணவி கா.கல்கி 100 க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைபாராட்டி, பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினர்.விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், மாணவ மாணவிகள்,  அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக. ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.  வருகை தந்த அனைவருக்கும் ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா.சவணன் நன்றி கூறினார்..  



பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad